மாணிக்கம்
சிவப்பு நிறமில்லாத,பால் படிந்த மாணிக்கங்கள், புகை படிந்தது போல் தோற்றம் கொண்ட மாணிக்கங்கள்,உடைந்த கரடு முரடான ஒழுங்கற்ற வடிவம் கொண்ட மாணிக்கக்கள்,மற்றும் துவாரம் உள்ள மாணிக்கங்கள் குறைபாடு கொண்டவை.
நீலம்
நீலகல்லை வாங்கியவுடன் அவற்றை அணிந்து கொள்ள கூடாது.சில நாட்கள் நீல கல்லை வைத்து பார்த்து நல்ல பலன் அளிக்கிறதா என்பதை அறிந்த பிறகே நகையில் பதித்து அணிய வேண்டும். தீய பலன் அளித்தால் அவை குறையுடையவை.
புஷ்பராகம்
கலங்கலான புஷ்பராகம்,ஒளியில்லாத,கருநிறம் கொண்ட,மேடு பள்ளமான,வெண்மையான நீரோட்டம் கொண்ட புஷ்பராக கற்கள் குறையுடையவை.