வலம்புரிச்சங்கு மஹாலட்சுமிக்கு உரியது...! வலம்புரிச்சங்கு இருக்குமிடம் மஹாலட்சுமியின் இருப்பிடமாக கருத்தப்படுகின்றது...!
இல்லத்தில் இதனை வைத்து வழிபட்டால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் குடும்பத்தில் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும் என்பது ஐதீகம்...!
வியாபாரஸ்தலங்களில் இச்சங்கினை வைத்து வழிபட்டால் தொழில் மேன்மைஅடையும் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.
வலம்புரிசங்கில் தீர்த்தம் நிரப்பி அதில் துளசி இலை இட்டு அந்த தீர்த்தத்தை வெள்ளிக்கிழமைகளில் இல்லத்தில் தெளித்தால் வாஸ்து தோஷம் நீங்கும்.
செவ்வாய்தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமைகளில் இந்த சங்கில் பால் நிரப்பி செவ்வாய் கிரக பூஜை செய்தால் தோஷம் நீங்கி திருமணம் நடக்கும்.
கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் சங்குக்கு குங்கும அர்ச்சனை செய்தால் கடன் விலகும்.
தெய்வத்துக்கு வலம்புரிச்சங்கால் அபிஷேகம் செய்தால் பத்து மடங்கு பலன் கிடைக்கும்.
வலம்புரிச் சங்கை முறைப்படி இல்லத்தில் வைத்து பூஜித்து வந்தால் செல்வச்
செழிப்பு ஏற்படும். பில்லி சூன்யம், திருஷ்டி, தீயசக்திகள் எதுவும்
அண்டாது.
புத்திரகானான குருவுக்கு பஞ்சமி திதியன்று வலம்புரி சங்கில் பசும் பால்
வைத்து பூஜித்தால் பிள்ளை இல்லாத தம்பதியர்க்கு பிள்ளை பிறக்கும்.
வழிபடும் முறை...!
ஒரு தட்டில் அரிசி அல்லது நெல் பரப்பி அதன்மேல் சங்கினை வைக்க வேண்டும், சங்கு வடக்கு அல்லது தெற்கு முகமாக இருக்க வேண்டும்.சங்கில் தண்ணீர் நிரப்பி துளசி போட்டு வைக்கலாம்.
நாணயங்கள்,தங்கம்,ரத்தினகற்களை போட்டு வைக்கலாம்...! பூக்கள் கொண்டு பூஜிக்கவேண்டும்...!
வலம்புரி சங்கின் மந்திரம்...!
பாஞ்ச ஜன்யாய வித்மஹே
சங்க ராஜாய தீமஹி
தந்தோ சங்கப் பரசோதயாத்