கார்னட்
அடுத்தவர்களை அதிகாரம் செய்யும் பதவியில் இருப்பவர்கள் இந்த கல்லை அணிந்து பலன் பெறலாம்.செல்வமும் ,செல்வாக்கும் பெருகும்.காதல் விவகாரங்களில் சிக்கி இருப்பவர்கள் இந்த கல்லை அணிய கூடாது தோல்வியை கொடுக்கும் .மனதில் பயம் தன்னம்பிக்கை குறைவு உள்ளவர்கள் இக்கல்லை அணிந்து நிவர்த்தி அடையலாம்.
மருத்துவ குணங்கள்
விஷத்தை முறிக்கும் தன்மை உண்டு , புற்று நோயால் பாதிக்க பட்டவர்கள் இக்கல்லை அணிந்தால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.
யாரெல்லாம் அணியலாம்..?
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பெயர் எண் 9 கொண்டவர்களும் இக்கல்லை அணியலாம். பவழத்திற்க்கு மாற்றாகவும் கார்னட் அணியலாம்.
...........................................
ஜேட்
குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோசத்தை நிவர்தி செய்கிறது. விபத்திலிருந்து காக்கும்.வறுமையை நீக்கி செல்வத்தை கொடுக்க்கும். நீண்ட ஆயுளையும்,ஆரோக்கியத்தையும் கொடுக்கும். அந்திம காலத்தில் அமைதியான மனநிலையை கொடுக்கும்.
மருத்துவ குணங்கள்
சிறுநீரக கோளாறு கொண்டவர்கள் இக்கல்லை அணிந்து நிவாரணம் பெறலாம். வயிற்று வலியை குணமாக்கும். வலிப்பு நோயைகுணமாக்கும். பிரசவ வலியை குறைக்கும். அனைத்து தோல் வியாதிகளையும் குணமாக்கும் .
யாரெல்லாம் அணியலாம்.
பொதுவாக அனைவருமே அணியலாம். குறிப்பாக 6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் 2,7 ஆகிய பிறந்த எண் கொண்டவர்களும் அணியலாம். மரகத பச்சைக்கு மாற்றாகவும் அணியலாம்.
.