Sunday, December 12, 2010

நவரத்தினங்களின் பண்புகள் --வைரம் (diamond)

உடல் உரம்,மன உரம் ,வெற்றி ,செல்வம் ,அதிஷ்டம், நட்பு  ஆகியவற்றுடன் தொடர்புகொண்டது வைரம் . தன்னம்பிக்கையை வளர்க்கும் .ஆணுக்கு பெண்ணிடமும் ,பெண்ணுக்கு ஆணிடமும் நேசத்தை வளர்க்கும் .கோரக்கனவுகளை நீக்கி இனிய தூக்கத்தை கொடுக்கும் .

கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை போக்கும் .கலைத்துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் பெரும் புகழும் வந்து சேரும் . பிறரை வசீகரிக்கும் வகையில் பேச்சாற்றல் உருவாகும் . சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.     

வைரத்தின் மருத்துவ குணங்கள்  

மலட்டு தன்மையை போக்கும், ஆண்குழந்தையை விரும்பும் பெண்கள் வைரம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும் .இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்க்கு உண்டு . சளி,சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும்.கருப்பை கோளாறை சரி செய்யும் .சக்கரை நோய் ,மனநோய் ஆகியவற்றை சரி செய்யும்.வாதம், பித்தம்     போன்ற நோய்களில் இருந்து காத்து ஆண்மைதன்மையை இழக்காதவாறு செய்யும்.

யாரெல்லாம்     வைரம் அணியலாம் ..!
சுக்கிரனை அதிபதியாய் கொண்ட  ரிஷபம் மற்றும் துலாம்  ராசிகாரர்களும்  பரணி,பூரம்,பூராடம் ஆகிய நட்சத்திர காரர்களும்  6 15 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும்  ,பெயர் எண் மற்றும் விதி எண் 6 15 25 கொண்டவர்களும்  வைரம் அணியலாம்..!

                        ............................அடுத்த பதிவு ....வைடூரியம்

0 comments:

Post a Comment