இதுவரை நவரத்தினங்கள் பற்றியும் அவற்றின் தன்மை மற்றும் அவற்றை யார் அணியலாம் என்ற விவரங்களை பார்த்தோம்.நவரத்தினங்களை போல இல்லாவிடினும் குறிப்பிட்டு சொல்லும்படி சிறப்பான பலனை அளிக்ககூடிய உப ரத்தினங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.இவ்வகைகற்களும் இயற்கையில் விளையகூடியவைதான்.இந்த கற்களை பெரும்பாலும் எண்கணித நிபுணர்கள்தான் பரிந்துரை செய்கிறார்கள்.ஆனால், ஜாதகப்படியும் இந்தகற்களை அணிந்து கொள்ளலாம்.
சில உப ரத்தினங்கள் நவரத்தினங்களுக்கு மாற்றாகவும் விளங்குகிறது. இந்த கற்களை பெரும்பாலும் அனைவருமே அணியலாம். இந்த கற்களுக்குள் நட்பு,பகை,தோசம் ஆகியவை ஏதும் கிடையாது.இந்த கற்கள் நன்மை மட்டுமே செய்யும்.ரத்தின நிபுணர்களின் பல வருட ஆராய்ச்சிக்கு பின்னரே இந்த வகை கற்கள் நவரத்தின கற்களுக்கு மாற்றாக பரிந்துரை செய்யபட்டன.
அதிகம் பயன்பாட்டில் இருக்கும் உப ரத்தினங்களைபற்றி காண்போம்.
1. அமிதிஸ்ட் (amethyst)
கத்தரி பூ நிறத்தில் அழகாக காட்சி அளிக்கும் இந்த கல் தமிழில் செவ்வந்தி கல் என அழைக்கபடுகிறது.
அமிதிஸ்ட் டின் பண்புகள்
இந்த கல் தெய்வீக அருளை ஆகர்ஷித்து தரும், ஆன்மீக ஆற்றலை அதிகரிக்கும்,குடியினை மறக்க முடியாதவர்கள் இந்த கல்லை மோதிரமாய் அணிந்தால் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியும்.விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும்.வியாபார தடையை போக்கும். கோபம்,விரக்தி ஆகியவற்றிலிருந்து காக்கும். குழந்தையின்மை,திருமணதடை ஆகிய பிரச்சனைகளுக்கு இக்கல்லை அணியலாம்.
அமிதிஸ்ட்டின் மருத்துவ குணங்கள்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள்,வயிற்றுவலி,மூட்டுவலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும். தூக்கமின்மை,மாலைக்கண் நோய் , தோல் வியாதி ஆகியவற்றில் இருந்து காக்கும்.
இந்த கல்லை அனைவருமே அணியலாம் 3,12,21,30 ஆகிய பிறந்த எண் கொண்டவர்கள்
புஷ்பராக கல்லுக்கு பதிலாக இந்த கல்லை அணியலாம்.
2 comments:
thank u sir..
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் (அக்வேரியன்ஸ்) இந்த உபரத்தினம் அணியலாம் என்று சொல்லுவார்கள். அது சரியா?
Post a Comment