Wednesday, December 8, 2010

நவரத்தினங்களின் பண்புகள் --புஷ்பராகம் (topaz)

இந்தகல் நிறமற்றதாகவும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மஞ்சள் நிற புஷ்பராகம் கனக புஷ்பராகம் ஆகும் இதுவே சிறந்தது. இந்த கல்லை  அணிந்தால் தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும்.துணிச்சல் பிறக்கும்.பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும்.நின்றுபோன  கட்டட  வேலைகள் மீண்டும் தொடங்கும்.

கோபம் குறையும்,மனம்அமைதியாக இருக்கும்.நிலம்,வீடு,வாகனம்,வாங்கும் நிலை  உருவாகும்.பெரும் புகழ் கிடைக்கும்  . பகை,சதி,சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும்.நல்ல நட்பை கொடுக்கும்.

புஷ்பராகத்தின் மருத்துவ குணங்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல்,இதயம்,குடல் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து காக்கும். நல்ல செரிமானத்தை கொடுக்கும். மூட்டுவலி,மூட்டு பிடிப்பு ஆகிய வற்றில் இருந்து காக்கும்.உடல் எடையை குறைக்கவும் பயன்படும்.

யாரெல்லாம்  புஷ்பராகம் அணியலாம்

தனுசு,மீனம்  ஆகிய ராசிகளின் அதிபதியான குரு விற்கு உரிய ரத்தினம் புஷ்பராகம்.
தனுசு,மீன ராசிக்காரர்களும்  புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி ஆகிய நட்சத்திர காரர்களும் புஷ்பராகம் அணியலாம். எண்கணித படி  3 ,12,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 3 அமைய பெற்றவர்களும் புஷ்பராகம் அணியலாம்.



.....................................................................................................அடுத்த பதிவு  பவழம்

8 comments:

மங்கை said...

இந்த கல்லை அணிந்தால் தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும்.துணிச்சல் பிறக்கும்.பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும்.நின்றுபோன கட்டட வேலைகள் மீண்டும் தொடங்கும்.//

புதிய தகவல்...நன்றி...தொட்ர்ந்து எழுதுங்க

அதிர்ஷ்டரத்தினங்கள் said...

///மங்கை
இந்த கல்லை அணிந்தால் தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும்.துணிச்சல் பிறக்கும்.பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும்.நின்றுபோன கட்டட வேலைகள் மீண்டும் தொடங்கும்.//

புதிய தகவல்...நன்றி...தொட்ர்ந்து எழுதுங்க////

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..மேடம்.!

அருட்சிவஞான சித்தர் said...

தங்களுடைய வலைப்பதிவு நன்றாக உள்ளது.
நவரத்தினங்களைக் கொண்டே அலங்கரிக்கின்றீர்கள்.
வாழ்த்துக்கள்.

தொடருங்கள் தங்கள் நவரத்தின பணியை.....

அதிர்ஷ்டரத்தினங்கள் said...

//அருட்சிவஞான சித்தர்

தங்களுடைய வலைப்பதிவு நன்றாக உள்ளது.
நவரத்தினங்களைக் கொண்டே அலங்கரிக்கின்றீர்கள்.
வாழ்த்துக்கள்.

தொடருங்கள் தங்கள் நவரத்தின பணியை.....///

நன்றி ...அருட்சிவஞான சித்தரே வருகைக்கும் கருத்துக்கும்...!

யோகம் said...

தங்களுடைய வலைப்பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தங்களின் தொண்டு பாராட்டுதலுக்கு உரியது. வாழ்த்துகள்

venkatesa gurukkal said...

கனக புஷ்பராகம் ரத்தினத்தை வலது கையில் எந்த விரலில் அணியவேண்டும்?
அதற்கான காரணமென்ன?

Unknown said...

கனக புஷ்பராகம் ரத்தினத்தை மகரம் அவிட்ட அணியலாமா?

Unknown said...

அய்யா நான் 11தேதில் பிறந்தேன் வலது கையில் மோதிரவிரளில் கனகபுஸ்பரகம் கல்லை வெள்ளி வலயம் கொண்டு அணிந்துள்ளேன்.

இது சரியா ?
இது உண்மையான கல் என்று நான் எப்படி சோதிச்சி பார்ப்பது ?

Post a Comment