Showing posts with label உப ரத்தினங்கள். Show all posts
Showing posts with label உப ரத்தினங்கள். Show all posts

Wednesday, January 5, 2011

உப ரத்தினங்கள் ---- ஆனிக்ஸ் (onyx), பெரில் கற்கள் (beryl stone)

ஆனிக்ஸ் 


இயந்திரங்கள், உலோகங்கள்  ஆகியவற்றில் பணிபுரிவோர்க்கு நல்ல பலனை கொடுக்கும்.இரவில் அதிகம் பயம் உள்ளவர்கள் இந்த கல்லை அணிந்தால் பயம் நீங்கும். திருஷ்டி அதிகம்  உள்ளவர்கள்  இந்த கல்லை அணியலாம்.ரியல் எஸ்டேட் தொழிலில்  இருப்பவர்களுக்கு  சிறந்த பலனை கொடுக்கும். மனதில்  படபடப்பு, மன  நிம்மதியின்மை போன்ற பிரச்சனைகளை தீர்க்கும்.  உத்தியோக  உயர்வை கொடுக்கும்.

யாரெல்லாம்  அணியலாம்..? 

6,15,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இக்கல்லை அணிந்து பலன் அடையலாம் . மரகதககல்லிற்க்கு மாற்றாக இந்த கல்லை அணியலாம்.
 ........

பெரில் கற்கள்


பொதுவில் பச்சை நிறம் கொண்ட இந்த கற்கள் நீலம்,சிவப்பு மற்றும்  தேன்  நிறத்திலும் கிடைக்கிறது. இந்த கல்லை  அணிந்தால் கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். வளமான  வாழ்க்கை அமையும். குடும்பத்தில்  சுப  நிகழ்ச்சிகள்  நடக்கும்.

மருத்துவ குணங்கள்

சிறுநீரக கோளாறுகள் நீங்கும், நரம்பு தளைச்சியை போக்கி  நரம்புகளுக்கு  நல்ல பலத்தை கொடுக்கும்.ரத்த சோகை நீங்கும். வாதம்,பித்தம் ஆகியவற்றை சமன் செய்யும்.தாம்பத்ய வாழ்வில் ஆர்வத்தை கொடுக்கும். தொண்டை,ஈரல் வியாதிகளை குணமாக்கும்.

யாரெல்லாம் அணியலாம்..?

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றும் துலாம்,ரிசப ராசிக்காரர்கள் இந்த கல்லை அணிந்து பலன் அடையலாம் . 

Tuesday, January 4, 2011

உப ரத்தினங்கள் --சந்திர காந்தகற்கள் (moon stone),சூரிய காந்தகற்கள்( sun stone)

    சந்திர காந்த கற்கள்  

இதை அணிவோர்க்கு மன பலம் அதிகமாகும். பொருள்வரவு தடையின்றி கிடைக்கும்.கல்வியில் கவனம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும்.ஜலகண்டதில் இருந்து காக்கும்.நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

மருத்துவ குணங்கள்   

தாம்பத்ய வாழ்வில் பிரச்சனைகள் மற்றும் இருதய கோளாறுகளை போக்கும்.வயிற்று  பிரச்சனைகளை நீக்கும்.குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். மனநிலை பாதிப்பு மூளை கோளறு ஆகியவற்றை சரி செய்யும்.

யாரெல்லாம் அணியலாம் ..?    
   
2,11,20,29   ஆகிய தேதிகளில் பிறந்த சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் அணியலாம். 7,16,25 ஆகிய தேதிகளில்   பிறந்த கேது ஆதிக்கம் பெற்றவர்களும் அணியலாம்.முத்து மற்றும் வைடூரியத்திற்க்கு  மாற்றாகவும் அணியலாம்.


சூரிய காந்த கற்கள்
 

  இந்த கல்லை அணிவதால் திடீர் முன்னேற்றம் உண்டாகும் .துரதிஷ்ட்டங்கள்  விலகி அதிஷ்ட்டம் உண்டாகும்.பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அரசு சம்பந்தமான தடைகள் நீங்கும்.


யாரெல்லாம் அணியலாம் ..?


 1,10,19,28   ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றும் சிம்ம ராசி, சிம்ம லக்கினம்  கொண்டவர்கள் இக்கல்லை  அணியலாம் . மாணிக்க கல்லுக்கு மாற்றாகவும் இக்கல்லை  அணிந்து பலன் பெறலாம்.   
 
குறிப்பு;-
   சபரி மலை பயணம்  அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக  ஊர் பயணங்கள் இருந்த படியால் பதிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது,இனி பதிவுகள் தொடர்ந்து வரும்.மேலும்  மெயில்  மூலம் கற்கள்  பற்றி ஆலோசனை கேட்டவர்களுக்கும் பதில் அனுப்ப இயலவில்லை ஆலோசனை கேட்ட அனைவருக்கும்  இந்த வார  இறுதிக்குள் படிப்படியாக    பதில் அனுப்புகிறேன்.


Tuesday, December 28, 2010

உப ரத்தினங்கள் ---கார்னட் (garnet),ஜேட்( jade)

கார்னட் 


  அடுத்தவர்களை  அதிகாரம் செய்யும் பதவியில் இருப்பவர்கள் இந்த கல்லை அணிந்து பலன் பெறலாம்.செல்வமும் ,செல்வாக்கும் பெருகும்.காதல் விவகாரங்களில் சிக்கி இருப்பவர்கள் இந்த கல்லை அணிய கூடாது தோல்வியை கொடுக்கும் .மனதில் பயம் தன்னம்பிக்கை குறைவு உள்ளவர்கள் இக்கல்லை அணிந்து நிவர்த்தி அடையலாம்.

மருத்துவ குணங்கள் 

விஷத்தை முறிக்கும் தன்மை உண்டு , புற்று நோயால் பாதிக்க பட்டவர்கள் இக்கல்லை அணிந்தால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

யாரெல்லாம்  அணியலாம்..?

9,18,27 ஆகிய தேதிகளில்  பிறந்தவர்களும், பெயர் எண் 9 கொண்டவர்களும் இக்கல்லை அணியலாம். பவழத்திற்க்கு மாற்றாகவும் கார்னட் அணியலாம்.

 ...........................................

ஜேட் 


குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோசத்தை நிவர்தி செய்கிறது. விபத்திலிருந்து காக்கும்.வறுமையை  நீக்கி செல்வத்தை  கொடுக்க்கும்.  நீண்ட ஆயுளையும்,ஆரோக்கியத்தையும் கொடுக்கும். அந்திம காலத்தில் அமைதியான மனநிலையை கொடுக்கும்.

மருத்துவ குணங்கள்

   சிறுநீரக கோளாறு கொண்டவர்கள் இக்கல்லை அணிந்து நிவாரணம் பெறலாம். வயிற்று வலியை குணமாக்கும். வலிப்பு  நோயைகுணமாக்கும். பிரசவ வலியை  குறைக்கும். அனைத்து தோல்  வியாதிகளையும் குணமாக்கும் .
யாரெல்லாம் அணியலாம்.

பொதுவாக அனைவருமே அணியலாம். குறிப்பாக  6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும்  2,7 ஆகிய பிறந்த எண் கொண்டவர்களும் அணியலாம். மரகத பச்சைக்கு மாற்றாகவும் அணியலாம். 





.

Monday, December 27, 2010

உப ரத்தினங்கள் --- அலெக்ஸாண்ட்ரைட் (alexanderite),அகேட் (agate)

அலெக்ஸாண்ட்ரைட்

இது மிகவும் விலை உயர்ந்தது. ஆலிவ் பச்சை நிறத்தில் காணப்படும், வெளிச்சம் பட்டால் சிவப்பு  நிறமாக மாறும் இதுவே  இதன் தனித்தன்மை. அரசியல்வாதிகள் மிகுந்த செல்வாக்கை பெற  இந்த கல்லை அணியலாம். மக்கள்  செல்வாக்கையும்,அரசு பதவியையும் பெற்றுதரும். மேடை பேச்சாளர்கள்,பேரம் பேசும்  தொழிலில்  இருப்பவர்கள் இக்கல்லை அணிந்து பலன்பெறலாம்.கமிஷன்,காண்ட்ராக்ட் தொழில்  செய்பவர்களும்  அணியலாம்.

 மருத்துவ குணங்கள் 
முக வாதம்,வாதம் ஆகிய குறைகளை  போக்கும், திக்குவாய் பிரச்சனை உள்ளவர்கள் இக்கல்லை  அணிந்தால் நல்ல பேச்சாற்றல் பெறலாம்..!

அனைவரும்  இக்கல்லை  அணியலாம்.

அகேட்


 இக்கல் பல வண்ணங்களில் கிடைக்கும்.ஆன்மீக உணர்வை  தூண்டும் சக்தி படைத்தவை. விவசாயிகள் அணிந்து நிலத்தின் மூலம் நல்ல லாபம் காணலாம். தவர ஆராய்சியாளர்கள்  அணிந்து பலன் பெறலாம்.தம்பதியினரிடையே  அன்யோன்யம் அதிகரிக்கும். வயது முதிர்ந்தவர்கள்  இக்கல்லை அணிந்தான் சுறு சுறுப்பும்  தெம்பும்  அடைவார்கள்.

 மருத்துவ குணங்கள்


தலைவலி, வாயுத்தொல்லையை போக்கும். அசிட்டிடி யை குணப்படுத்தும்.




9, 18,27  ஆகிய தேதிகளில்  பிறந்தவர்கள் இக்கல்லை  அணியலாம். சிவப்பு  அகேட் கற்களை  பவழத்திற்க்கு  மாற்றாக  அணியலாம்.




...

Sunday, December 26, 2010

உப ரத்தினங்கள் --- அம்பர் (amber), அக்வா மெரின் (aquamarune)

அம்பர் 

அம்பரின் பண்புகள்
அரசியல் வாதிகளுக்கும்,அரசு வேலைகளில் இருப்பவர்களுக்கும் சம்பள உயர்வு,பதவி உயர்வு கிடைக்கும்.

மருத்துவ குணங்கள் 

ஜீரண கோளாறுகளை  சரி செய்கிறது,கருச்சிதைவை தடுக்கும்,கண்பார்வை கோளாறுகள்,காதுவலி,சிறுநீரகம் சம்பந்த பட்ட வலிகள் நீங்கும்.பிரசவ காலத்தில் அம்பர் பொடியை தூபமிட்டால் நன்மை கிடைக்கும்.

யாரெல்லாம்  அம்பர் அணியலாம்..? 


பொதுவாக இந்த கல்லை அனைவருமே  அணிந்து  பலன் பெறலாம். 1,10,19,28 ஆகிய தேதிகளில்  பிறந்தவர்களும்,9,18,27 ஆகிய தேதிகளில்  பிறந்தவர் களும் அணியலாம்.
மாணிக்கம் மற்றும் பவழ கற்களுக்கு  மாற்றாகவும் இதனை அணியலாம்.


அக்வா மெரின் 

திரைப்படதுறையில் இருப்பவர்களுக்கும்,ட்ராவல்ஸ் நிறுவனம் நடத்துபவர்களுக்கும் இந்த கல்  மிகுந்த  நற்பலனை  அளிக்கும். மணவாழ்வில்  பிரிய  நினைப்பவர்கள்  இந்த கல்லை அணிந்தால் பிரிவினை நீங்கி ஒன்று  சேர்வார்கள்.

மருத்துவ குணங்கள்

உடலில்  எப்போதும்  உஷ்னத்துடன் இருப்பவர்கள் இக்கல்லை  அணிந்து கொண்டால் உஷ்ணம் சமனிலை அடையும். வாதம்,பித்தம்  ஆகிய பிரச்சனைகளுக்கு உகந்தது.பல்,கழுத்து  சம்பந்த பட்ட நோய்களை  குணமாக்கும்.

யாரெல்லாம்  அணியலாம்..? 

4, 13,22,31 மற்றும் 8,17,26 ஆகிய தேதிகளில்  பிறந்தவர்கள் இக்கல்லை அணியலாம். நீலம் மற்றும் மரகதத்திற்க்கு மாற்றாகவும்  இதனை அணிந்து பலன் பெறலாம்.





...

Friday, December 24, 2010

உப ரத்தினங்கள் --ஓர் அறிமுகம்

இதுவரை நவரத்தினங்கள் பற்றியும் அவற்றின் தன்மை மற்றும் அவற்றை யார் அணியலாம் என்ற விவரங்களை பார்த்தோம்.நவரத்தினங்களை போல இல்லாவிடினும் குறிப்பிட்டு சொல்லும்படி சிறப்பான பலனை அளிக்ககூடிய உப ரத்தினங்கள் நூற்றுக்கணக்கில்  உள்ளன.இவ்வகைகற்களும் இயற்கையில் விளையகூடியவைதான்.இந்த கற்களை பெரும்பாலும் எண்கணித  நிபுணர்கள்தான் பரிந்துரை செய்கிறார்கள்.ஆனால், ஜாதகப்படியும்  இந்தகற்களை  அணிந்து கொள்ளலாம்.
சில உப ரத்தினங்கள் நவரத்தினங்களுக்கு மாற்றாகவும்  விளங்குகிறது. இந்த கற்களை பெரும்பாலும் அனைவருமே அணியலாம். இந்த கற்களுக்குள் நட்பு,பகை,தோசம்  ஆகியவை ஏதும் கிடையாது.இந்த கற்கள் நன்மை மட்டுமே செய்யும்.ரத்தின நிபுணர்களின் பல வருட ஆராய்ச்சிக்கு  பின்னரே இந்த  வகை கற்கள்  நவரத்தின கற்களுக்கு மாற்றாக பரிந்துரை செய்யபட்டன.

அதிகம் பயன்பாட்டில் இருக்கும் உப ரத்தினங்களைபற்றி காண்போம்.

1. அமிதிஸ்ட் (amethyst) 

கத்தரி பூ நிறத்தில் அழகாக காட்சி அளிக்கும் இந்த கல் தமிழில் செவ்வந்தி கல் என அழைக்கபடுகிறது.

அமிதிஸ்ட் டின் பண்புகள் 

இந்த கல் தெய்வீக அருளை ஆகர்ஷித்து தரும்,  ஆன்மீக ஆற்றலை அதிகரிக்கும்,குடியினை மறக்க முடியாதவர்கள் இந்த கல்லை மோதிரமாய் அணிந்தால் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியும்.விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும்.வியாபார தடையை போக்கும். கோபம்,விரக்தி ஆகியவற்றிலிருந்து காக்கும். குழந்தையின்மை,திருமணதடை ஆகிய பிரச்சனைகளுக்கு இக்கல்லை  அணியலாம்.


அமிதிஸ்ட்டின் மருத்துவ குணங்கள்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள்,வயிற்றுவலி,மூட்டுவலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும்.  தூக்கமின்மை,மாலைக்கண் நோய் , தோல் வியாதி ஆகியவற்றில் இருந்து காக்கும்.


இந்த கல்லை அனைவருமே அணியலாம்  3,12,21,30 ஆகிய பிறந்த எண் கொண்டவர்கள்
புஷ்பராக கல்லுக்கு பதிலாக  இந்த கல்லை அணியலாம்.