Showing posts with label கோமேதகம். Show all posts
Showing posts with label கோமேதகம். Show all posts

Wednesday, December 15, 2010

நவரத்தினங்களின் பண்புகள் --கோமேதகம் (hessonits )

புத்திசாலிதனத்தையும்,கல்வி மேம்பாட்டினையும் கொடுக்கும்.அச்சத்தைபோக்கி தைரியத்தை கொடுக்கும்.தம்பதியினரிடையே இணக்கத்தை உண்டாக்கி அமைதியான மகிழ்ச்சியான வாழ்வை தரும்.வாக்கு வசியம்,வாக்கு சாதுர்யம் உண்டாகும்.அரசியல் வாதிகள்,கலைஞர்கள்,ஆசிரியர்கள் ஆகியோருக்கு வெற்றியை தரும்.

உத்தியோக உயர்வை  கொடுக்கும்,தொழில்வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. பண வரவை அதிகரிக்கும். லாட்டரி,ரேஸ் ஆகியவற்றில் வெற்றியை  கொடுக்கும். பங்கு வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலனை  கொடுக்கும்.
 கோமேதகத்தின் மருத்துவ குணங்கள்

கோமேதக பஸ்பம் ஈரல்வலி,குடல்வாதம்,ரத்த புற்று, வெண்குஷ்ட்டம் போன்ற நோய்களை குணப்படுததும். பசியின்மையை போக்கும். 


யாரெல்லாம் கோமேதகம்  அணியலாம்..?

திருவாதிரை,சுவாதி,சதய  நட்சத்திர காரர்கள்.மற்றும்  எண்கணித படி 4 13 31 ஆகிய தேதிகளில்  பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 4 வருபவர்களும் கோமேதகம்  அணியலாம்.




இதுவரை நவரத்தின கற்களை  பற்றியும், அதன் பண்புகளையும்   சிறிதளவு தெரிந்து கொண்டோம்  ஒரு சிறிய இடைவெளிக்கு  பின்னர் நவரத்தினங்களை  பற்றிய மேலும் பல விவரங்களையும்,உபரத்தினங்களை  பற்றிய முழுமையான விவரங்களையும் காணலாம். 


மேலும் போலியான  கற்களை  அறியும் முறை, ஒருவர் ஜாதகபடி கற்களை எப்படி  தேர்ந்தெடுக்கலாம்  என்பதை எளிதாய் புரியும்படி  விரிவாய்  அலசுவோம்..!

ஒரு  சிறிய  இடைவெளிக்கு பின்  பதிவுகள்  தொடரும்  நன்றி...!