Showing posts with label நவரத்தின சுத்தி. Show all posts
Showing posts with label நவரத்தின சுத்தி. Show all posts

Friday, January 21, 2011

நவரத்தினங்களை சுத்தி செய்தல்..! (வைரம்...முத்து...மரகதம் )

வைரம்  


வைரத்தை பெண் குதிரையின் சிறு நீரில் மூன்று நாட்கள் ஊற வைத்து பின்னர் நல்ல  வெய்யிலில்  காய  வைத்தால் வைரம் சுத்தி ஆகும். எலுமிச்சை பழத்தினுள் வைரத்தை  வைத்து அகத்தி  இலை சாறில் வேக  வைத்து  எடுத்தாலும் வைரம் சுத்தி ஆகும்.

முத்து


பசுவின் சிறுநீர்,புளிப்புவகை காடி,பழச்சாறு ஆகியவற்றில்  சுத்தி  செய்து பசும்பாலில்  சுத்தம்  செய்ய வேண்டும்.  குண்டலி பரு ரசம்,புவியின் ரசம்,பொன்னங்காய் ரசம் ஆகிய வற்றில் மூன்று  நாட்கள் ஊற  வைத்தும்  முத்தை   சுத்தம்  செய்யலாம்.

மரகதம்  


நிலப்பூசணி கிழங்கை துவாரம் செய்து அதில் மரகதகல்லை வைத்து சிலைமண் செய்து குக்குட  புடமிட்டு காக்க சீதகத்தால்   எடுக்க  மரகதம்  சுத்தி ஆகும்.