Wednesday, March 16, 2011

குறைபாடுள்ள ரத்தினங்களை அறிந்து கொள்வது எப்படி ..? மாணிக்கம்,நீலம்,புஷ்பராகம்,

மாணிக்கம் 



சிவப்பு நிறமில்லாத,பால் படிந்த மாணிக்கங்கள், புகை படிந்தது போல் தோற்றம் கொண்ட மாணிக்கங்கள்,உடைந்த கரடு முரடான ஒழுங்கற்ற வடிவம் கொண்ட மாணிக்கக்கள்,மற்றும் துவாரம் உள்ள மாணிக்கங்கள் குறைபாடு கொண்டவை.

நீலம்  

நீலகல்லை  வாங்கியவுடன் அவற்றை அணிந்து  கொள்ள கூடாது.சில நாட்கள் நீல கல்லை வைத்து பார்த்து நல்ல  பலன் அளிக்கிறதா  என்பதை  அறிந்த பிறகே  நகையில்  பதித்து   அணிய  வேண்டும். தீய பலன் அளித்தால் அவை குறையுடையவை.


புஷ்பராகம்

கலங்கலான புஷ்பராகம்,ஒளியில்லாத,கருநிறம்  கொண்ட,மேடு பள்ளமான,வெண்மையான நீரோட்டம் கொண்ட புஷ்பராக கற்கள்  குறையுடையவை.


Tuesday, March 15, 2011

குறைபாடுள்ள (தரமற்ற) ரத்தின கற்களை கண்டுகொள்வது எப்படி..?

ரத்தினங்களில் போலிகளை கண்டு கொள்வது பற்றி பின்னர் காண்போம்..! இந்த பதிவில் சொல்ல  இருப்பது  அசல் ரத்தினங்களாக இருந்தாலும்  அவற்றில் உள்ள  குறைபாடுகளையும்,குற்றங்களையும் அறிந்து  கொள்வது எப்படி என்பதை காண்போம். குற்றங்கள்,குறைபாடுகள் உள்ள  ரத்தினங்களை அணிவது அமங்கலமாக கருதப்படுகிறது எனவே அவற்றை அணிய கூடாது..!

முக்கிய  குறிப்பு

ரத்தின கற்களை இரவு நேரங்களிலோ அல்லது  மின்  விளக்கு  ஒளியிலோ பார்த்து வாங்க கூடாது. நல்ல பகலில்  சூரிய ஒளியில் ஒரு பூதகண்ணாடி வழியே பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.அப்போதுதான் அவற்றில் உள்ள குறைபாடுகள்  தெளிவாக தெரியும்.!

குறை பாடுகள்

வைரம்


பொருத்தமற்ற  வடிவம் கொண்டவைரங்கள்,முனைகள் உடைந்த,துவாரம் உள்ள வைரங்கள், ஒளியற்ற வைரங்கள்,குமிழ்கள் உள்ள வைரங்கள்,நிற பேதமுள்ள வைரங்கள்,கீறல் உள்ள வைரங்கள் ஆகியவை குறை பாடுள்ள வைரங்கள் ஆகும்.

முத்து      

  
மச்சங்கள்,புள்ளிகள்,விரிசல் கொண்ட முத்துக்கள் குறைபாடுள்ளவை.மேலும் மெல்லிய கோடுகள் மற்றும் ஒளியற்ற தன்மை கொண்ட  முத்துக்களும்  குறையுடையவை



மரகதம்


மேடு பள்ளம்  உடையவை , துவாரங்கள்,கரும்புள்ளிகள், விரிசல்,கொண்ட மரகத கற்கள்  குறைபாடுள்ளவை.மேலும் ஒளியற்ற கற்களும்  குறை பாடுள்ளவை.


அடுத்த பதிவில் --- மாணிக்கம்,நீலம்,புஷ்பராகம்




Sunday, March 13, 2011

நவரத்தினங்கள் சுத்தி செய்தல்-- வைடூரியம்,கோமேதகம்,பவழம்

வைடூரியம்

வைடூரியத்தை குதிரையின் சிறுநீரில் ஒருநாள்  முழுவதும் போட்டுவைத்து பின்னர் அதை பூசணிகாய் சாறில் போட்டுவைக்க வேண்டும் .அதன்பின் அதை கழுவவேண்டும்.

கோமேதகம்  




கோமேதகத்தை  குதிரையின் சிறுநீரில் மூன்று நாட்கள் போட்டு பின்னர் நில பூசணிக்கிழங்கு சாறில் மூன்று நாட்கள் போட்டு வைக்க வேண்டும்.மீண்டும் அதனை எலுமிச்சை சாறில் மூன்றுநாட்கள் போட்டு  வைத்து வெந்நீரில்  கழுவவேண்டும்.

பவழம் 


ஒரு கண்ணாடி குவளையில் எலுமிச்சை பழ சாறை ஊற்றி அதில் பவழத்தை நான்கு மணி நேரம் போட்டு  வைத்து வெந்நீரில் கழுவ வேண்டும்.




Friday, March 11, 2011

நவரத்தினங்கள் சுத்திசெய்தல்......! மாணிக்கம்,நீலம்,புஷ்பராகம்

மாணிக்கம்


  குதிரையின் சிறுநீரில் மாணிக்கத்தை  மூன்று நாட்கள் போட்டு பிறகு வெயிலில் காய வைத்து  வெந்நீரில்  கழுவினால் மாணிக்கம் சுத்தமாகும்.


நீலம்


கழுதையின் சிறுநீரில் நீலகற்களை இரண்டுநாட்கள்  வைத்திருந்து வெய்யிலில் காய  வைத்து பிறகு  கழுவினால் நீலம் சுத்தமாகும்.

புஷ்பராகம் 

 
ஆட்டின் சிறுநீரில் புஷ்பராக கல்லை  இரண்டுநாட்கள்  வைத்திருந்து பிறகு  வெய்யிலில் காயவைத்து  கழுவினால் சுத்தமாகும்


இடைவெளிக்கு பின்....மீண்டும்...!

தவிர்க்க முடியாத  சில காரணங்களால் சில நாட்களாக  பதிவுகளை தொடர முடியவில்லை  மேலும் அதிஷ்டகல்  பரிந்துரை வேண்டி  மெயில் அனுப்பியவர்களுக்கும் பதில் அனுப்ப முடியவில்லை..!  இனி பதிவுகள்  தொடரும்...!  மெயில் அனுப்பியவர்களுக்கும்  விரைவில்  பதில் அனுப்புகிறேன்..!

தாமதத்திற்கு  பொருத்தருள்க...!

நன்றி...!