Sunday, January 9, 2011

அதிர்ஷ்ட கற்களுக்கான உலோகங்களும், அணிய வேண்டிய விரல்களும்...!


மாணிக்கம்
உலோகம் - தங்கம்
விரல்- மோதிர விரல்


முத்து
உலோகம்--  தங்கம் அல்லது வெள்ளி
விரல்- ஆள்காட்டி விரல்,மோதிர விரல்


புஷ்பராகம்,கனக புஷ்பராகம்
உலோகம்--தங்கம்
விரல்--ஆள்காட்டி விரல்


கோமேதகம்

உலோகம்-வெள்ளி அல்லது தங்கம்
விரல் -- மோதிர விரல்,நடு  விரல்


மரகதம்
உலோகம்-- தங்கம் அல்லது வெள்ளி
விரல்- சுண்டு விரல்,மோதிர விரல்


வைரம்
உலோகம்-தங்கம் அல்லது பிளாட்டினம்
விரல்- மோதிர விரல்


வைடூரியம்
உலோகம்--தங்கம் அல்லது வெள்ளி
விரல்--  நடு விரல்,சுண்டு விரல் மோதிர விரல்


நீலம்
உலோகம்-- வெள்ளி,பிளாட்டினம்,தங்கம்
விரல்    --  நடு விரல்

பவழம்

உலோகம்-தங்கம்,வெள்ளி,செம்பு
விரல்-மோதிர விரல்,

Thursday, January 6, 2011

நவரத்தின மோதிரங்கள்--- யார், எப்படி அணியவேண்டும்...? ஒரு பார்வை



செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்தான் நவரத்தினம் அணிய வேண்டும் என்பது பெரும்பான்மையினர் கருத்து.மேலும் நவரத்தினங்களை வாங்கி சில நாட்கள் தன்னுடன் வைத்திருந்து பரீட்சித்து பார்த்து அணிந்து கொள்வது நலம்.நவரத்தின மோதிரம் அணிந்து சிலருக்கு காய்ச்சல்,தலைவலி ஏற்படலாம். பொதுவாக ஓபன் செட்டிங்கில் அணிவது பலன்தரும்.தங்கத்தில் மட்டுமே பதித்து அணிய வேண்டும்.இரத்தின நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது நல்லது.

பதிக்கும் முறை  


மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குபக்கம் வைரம் பதிக்க வேண்டும்.பிறகு கடிகார சுற்றுபடி  முத்து,பவளம்,கோமேதகம்,நீலம்,வைடூரியம்,புஷ்பராகம் மரகதம் ஆகியவற்றை வரிசையாய் பதிக்க வேண்டும்.        

நவரத்தினங்கள்  தரும் நற்பலன்கள் 

நவரத்தின மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால்        அவர் மிக சிறந்த  அதிஷ்ட சாலிதான். பெரும் சாதனைகள் படைக்கலாம்.எதிலும் வெற்றிகிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி,புகழ்,செல்வாக்கு அனைத்தும் கிடைக்கும்.போடும்  திட்டங்கள்  எல்லாம்  சரியானதாக இருக்கும்.உழைப்பிற்க்கு  முழுமையான வெற்றி கிடைக்கும்.

யாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாம் ...?

மேஷ ராசி,மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள்
மிருகசீரிஷம்,அவிட்டம், சித்திரை         ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .

எண் கணித படி 9,18,27  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண்  9 வருபவர்களும் அணியலாம்.

பிறவி       எண்  2,7  கொண்டவர்கள்  நவரத்தின மோதிரம் அணிய கூடாது.  வேறு   எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின்  ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்துதான் அணிய வேண்டும்.

Wednesday, January 5, 2011

உப ரத்தினங்கள் ---- ஆனிக்ஸ் (onyx), பெரில் கற்கள் (beryl stone)

ஆனிக்ஸ் 


இயந்திரங்கள், உலோகங்கள்  ஆகியவற்றில் பணிபுரிவோர்க்கு நல்ல பலனை கொடுக்கும்.இரவில் அதிகம் பயம் உள்ளவர்கள் இந்த கல்லை அணிந்தால் பயம் நீங்கும். திருஷ்டி அதிகம்  உள்ளவர்கள்  இந்த கல்லை அணியலாம்.ரியல் எஸ்டேட் தொழிலில்  இருப்பவர்களுக்கு  சிறந்த பலனை கொடுக்கும். மனதில்  படபடப்பு, மன  நிம்மதியின்மை போன்ற பிரச்சனைகளை தீர்க்கும்.  உத்தியோக  உயர்வை கொடுக்கும்.

யாரெல்லாம்  அணியலாம்..? 

6,15,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இக்கல்லை அணிந்து பலன் அடையலாம் . மரகதககல்லிற்க்கு மாற்றாக இந்த கல்லை அணியலாம்.
 ........

பெரில் கற்கள்


பொதுவில் பச்சை நிறம் கொண்ட இந்த கற்கள் நீலம்,சிவப்பு மற்றும்  தேன்  நிறத்திலும் கிடைக்கிறது. இந்த கல்லை  அணிந்தால் கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். வளமான  வாழ்க்கை அமையும். குடும்பத்தில்  சுப  நிகழ்ச்சிகள்  நடக்கும்.

மருத்துவ குணங்கள்

சிறுநீரக கோளாறுகள் நீங்கும், நரம்பு தளைச்சியை போக்கி  நரம்புகளுக்கு  நல்ல பலத்தை கொடுக்கும்.ரத்த சோகை நீங்கும். வாதம்,பித்தம் ஆகியவற்றை சமன் செய்யும்.தாம்பத்ய வாழ்வில் ஆர்வத்தை கொடுக்கும். தொண்டை,ஈரல் வியாதிகளை குணமாக்கும்.

யாரெல்லாம் அணியலாம்..?

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றும் துலாம்,ரிசப ராசிக்காரர்கள் இந்த கல்லை அணிந்து பலன் அடையலாம் . 

Tuesday, January 4, 2011

உப ரத்தினங்கள் --சந்திர காந்தகற்கள் (moon stone),சூரிய காந்தகற்கள்( sun stone)

    சந்திர காந்த கற்கள்  

இதை அணிவோர்க்கு மன பலம் அதிகமாகும். பொருள்வரவு தடையின்றி கிடைக்கும்.கல்வியில் கவனம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும்.ஜலகண்டதில் இருந்து காக்கும்.நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

மருத்துவ குணங்கள்   

தாம்பத்ய வாழ்வில் பிரச்சனைகள் மற்றும் இருதய கோளாறுகளை போக்கும்.வயிற்று  பிரச்சனைகளை நீக்கும்.குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். மனநிலை பாதிப்பு மூளை கோளறு ஆகியவற்றை சரி செய்யும்.

யாரெல்லாம் அணியலாம் ..?    
   
2,11,20,29   ஆகிய தேதிகளில் பிறந்த சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் அணியலாம். 7,16,25 ஆகிய தேதிகளில்   பிறந்த கேது ஆதிக்கம் பெற்றவர்களும் அணியலாம்.முத்து மற்றும் வைடூரியத்திற்க்கு  மாற்றாகவும் அணியலாம்.


சூரிய காந்த கற்கள்
 

  இந்த கல்லை அணிவதால் திடீர் முன்னேற்றம் உண்டாகும் .துரதிஷ்ட்டங்கள்  விலகி அதிஷ்ட்டம் உண்டாகும்.பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அரசு சம்பந்தமான தடைகள் நீங்கும்.


யாரெல்லாம் அணியலாம் ..?


 1,10,19,28   ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றும் சிம்ம ராசி, சிம்ம லக்கினம்  கொண்டவர்கள் இக்கல்லை  அணியலாம் . மாணிக்க கல்லுக்கு மாற்றாகவும் இக்கல்லை  அணிந்து பலன் பெறலாம்.   
 
குறிப்பு;-
   சபரி மலை பயணம்  அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக  ஊர் பயணங்கள் இருந்த படியால் பதிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது,இனி பதிவுகள் தொடர்ந்து வரும்.மேலும்  மெயில்  மூலம் கற்கள்  பற்றி ஆலோசனை கேட்டவர்களுக்கும் பதில் அனுப்ப இயலவில்லை ஆலோசனை கேட்ட அனைவருக்கும்  இந்த வார  இறுதிக்குள் படிப்படியாக    பதில் அனுப்புகிறேன்.