Thursday, December 2, 2010

நவரத்தினங்களின் பண்புகள் --- மாணிக்கம் (ruby)

இரத்தினங்களின்  ராஜா எனப்படும்  மாணிக்கம்  சிவப்பு மற்றும்,இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் . 

 பண்புகள் 

மாணிக்ககல்  உணர்ச்சி வசப்படுதலை கட்டுபடுத்தும். வாழ்வில் உயர்வையும் தைரியத்தையும் கொடுக்கும் . வெகுளித்தனமாகவும்,ஏமாளித்தனமும்  உள்ளவர்கள் இந்த கல்லை அணிந்தால் அவர்கள் புத்தி சாதுர்யம் பெறுவார்கள். தீய எண்ணங்கள் ,கவலை ,கருத்து வேறுபாடுகளை போக்கும் . இந்த கல் நீண்ட ஆயுளை கொடுக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை .

மாணிக்கத்தை கனவில் கண்டால் அதிஷ்டம் உண்டாகும் . இது செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது .மன உறுதியையும் ,தன்னம்பிக்கையையும் கொடுக்கும் .இதனை தலையணை அடியில் வைத்து வைத்து தூங்கினால்  தீய கனவுகளை தடுத்து நல்ல நித்திரையை கொடுக்கும் .

மாணிக்க கல்லை அணிவதால் முக வசீகரம் அதிகரிக்கும் .கடினமான காரியங்கள் எளிதில்  கைகூடும் .நினைவாற்றல் அதிகரிக்கும் .தொழில்,வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும் .      

யாரெல்லாம் மாணிக்கம் அணியலாம் ..!

சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். சூரியனுக்குரிய  ரத்தினம் மாணிக்கம்  ஆகும் . எனவே சிம்மராசிக்காரர்கள் இந்த கல்லை அணியலாம் .மேலும் கிருத்திகை,உத்தரம்,உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் மாணிக்கம் அணியாலாம்    . எண்கணித படி    1,10,19,28 ஆகிய தேதிகளில்  பிறந்தவர்கள் இந்த கல்லை அணியலாம் . பிறந்த தேதி,மாதம்,வருடம்  ஆகியவற்றை கூட்டினால்  1 வருபவர்களும் ,  பெயர் எண் 1 ஆக அமைந்தவர்கள்  மாணிக்கம்   அணியலாம்.  

ஒருவரின் தனிப்பட்ட ஜாதகத்தை ஆராய்ந்து மாணிக்கம் அணிவது  நல்லது..!

3 comments:

துளசி கோபால் said...

பதிவு நல்லா இருக்குதுங்க. வாழ்த்து(க்)கள். தொடர்ந்து வர்றோம்.


நவரத்தினக்களைப் பற்றி எழுதி முடிச்சதும் மற்ற ( Gem Stones)கற்களையும் பற்றி எழுதுங்க.

அதிர்ஷ்டரத்தினங்கள் said...

///துளசி கோபால் said...

பதிவு நல்லா இருக்குதுங்க. வாழ்த்து(க்)கள். தொடர்ந்து வர்றோம்.


நவரத்தினக்களைப் பற்றி எழுதி முடிச்சதும் மற்ற ( Gem Stones)கற்களையும் பற்றி எழுதுங்க.///

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்...! கண்டிப்பா அனைத்து கற்களையும் பற்றி விவரமாக எழுதுகிறேன்...!

Unknown said...

I am S.Karthick Jaikumar DOB- 14.09.1966-
Magara Rasi, Uthradam Nakshram, Sun is in (Simmam) it is 12th place with Guru, sukran.
Already i am wearing Blue stone in Middle finger and Maragatham in Last finger. Can I wear Ruby stone in Sun finger. Please advise.My phone 9840601310

Post a Comment